Published : 14 Feb 2025 04:13 PM
Last Updated : 14 Feb 2025 04:13 PM
சென்னை: கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான செட் தகுதித்தேர்வு மார்ச் 6 முதல் 9-ம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2024-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான தகுதித்தேர்வுக்கு (செட்) திருநெல்வேலி மனோமணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் இணையவழியில் பெறப்பட்டன.
இந்நிலையில், செட் தகுதித்தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட வேண்டும் என்று உயர்கல்வித்துறை கடந்த ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி அரசாணை வெளியிட்டது.
அதன்படி, யுஜிசி வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி செட் தகுதித்தேர்வு மார்ச் 6, 7, 8, 9 ஆகிய தேதிகளில் கணினி வழியில் நடைபெறும். இத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் தேர்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்பாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். ஹால்டிக்கெட் விண்ணப்பதாரர்களுக்கு தனியாக அனுப்பப்படாது, என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment