Published : 05 Jan 2025 03:34 AM
Last Updated : 05 Jan 2025 03:34 AM

‘சிடெட்' தேர்வு உத்தேச விடைகள் வெளியீடு

சென்னை: கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சி-டெட் தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியிடப்பட்டுள்ளன.

கேந்​திரிய வித்​யாலயா பள்ளி​கள், நவோதயா பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பாடத்​திட்டம் பின்​பற்​றப்​படும் பள்ளி​களில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்ட​தாரி ஆசிரியர் பணியில் சேர சி-டெட் எனப்​படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்​வில் தேர்ச்​சிபெற வேண்​டியது கட்டாயம் ஆகும்.

கடந்த டிச. 14 மற்றும் 15-ம் தேதி நாடு முழு​வதும் நடந்த இத்தேர்​வுக்கான உத்தேச விடைகளும் தேர்​வர்களின் விடைத்​தாள் நகல்​களும் (ஓஎம்ஆர் ஷீட்) சிபிஎஸ்இ இணையதளத்​தில் (https://ctet.nic.in) வெளி​யிடப்பட்​டுள்ளன. உத்தேச விடைகள் மீது ஏதேனும் ஆட்சேபம் இருந்​தால் உரிய ஆவணங்களுடன் ஜன.5-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்​ணப்​பிக்கலாம். இதற்கு கட்ட​ணம் ரூ.1000-த்தை ஆன்​லைனில் செலுத்​தலாம் என சிபிஎஸ்இ அறி​வித்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x