Published : 05 Jan 2025 01:05 AM
Last Updated : 05 Jan 2025 01:05 AM
சென்னை: எஸ்ஆர்எம் தமிழ்ப்பேராயம் சார்பில் ‘சொல் தமிழா! சொல்!’ 2025 எனும் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான பேச்சுப்போட்டி நடைபெறுகிறது.
தமிழகமெங்கும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பேச்சுத் திறன்மிக்க மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் இந்தப் போட்டி நடைபெறவிருக்கிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
அதன் விவரம் வருமாறு: சென்னை மண்டலப் போட்டிகள்- ஜனவரி 26, வேலூர் மண்டலப் போட்டிகள்- பிப்ரவரி 2, கடலூர்- பிப்ரவரி 9, திருச்சி- பிப்ரவரி 16, தஞ்சாவூர்- பிப்ரவரி 23, மதுரை- மார்ச் 2, நெல்லை- மார்ச் 9, கோவை- மார்ச் 16, சேலம்- மார்ச் 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் 18 முதல் 25 வயது வரையிலான இளங்கலை முதலாமாண்டு மாணவர் முதல் முனைவர் பட்ட ஆய்வாளர் வரை (கல்லூரி, பல்கலைக்கழகத்தில் பயில்வோர் மட்டும்) பங்கேற்கலாம்.
மாநில அளவிலான போட்டி ஏப்.6-ம் தேதி முற்பகலிலும், அன்று மாலையே பரிசளிப்பு விழாவும் நடைபெறும். மண்டல அளவில் முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும், ஆறுதல் பரிசாக 5 நபர்களுக்கு தலா ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும். மாநில அளவில் முதல் பரிசாக ரூ.5 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.3 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.2 லட்சமும் வழங்கப்படும். இப்போட்டியின் மொத்த பரிசுத் தொகையாக ரூ.40 லட்சம் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியின் பிரிண்ட் மீடியா பார்ட்னராக ‘இந்து தமிழ்திசை’ நாளிதழும், மீடியா பார்ட்னராக புதிய தலைமுறை, வேந்தர், புதுயுகம் தொலைக்காட்சிகளும் இணைந்துள்ளன. இப்போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் இந்த லிங்கில் https://forms.gle/jQPWBToWbzzsbVvz8 பதிவுசெய்து கொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 044- 27417375, 2741 7376, 2741 7377, 2471 7378 ஆகிய எண்களில் அல்லது tamilperayam@srmist.edu.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT