Last Updated : 18 Dec, 2024 06:30 AM

 

Published : 18 Dec 2024 06:30 AM
Last Updated : 18 Dec 2024 06:30 AM

கல்​லூரி மாணவிகள் நடித்த வீரயுக நாயகன் ‘வேள்​பாரி’ நாடகம்

வேள்பாரியும், கபிலரும் இடம்பெற்ற காட்சி.

சென்னை: ஷங்கர்​லால் சுந்​தர்​பாய் ஷசுன் ஜெயின் கல்லூரி மாணவிகள் அனைத்து கதாபாத்​திரங்​களை​யும் ஏற்று நடித்த வீரயுக நாயகன் ‘வேள்​பாரி’ நாடகம், ரசிகர்கள் மத்தி​யில் நல்ல வரவேற்​பைப் பெற்​றது. எழுத்​தாளர் சு.வெங்​கடேசன் எழுதிய முல்லைக்கு தேர் கொடுத்த பாரி​யின் வாழ்க்கை வரலாற்றை ஸ்ரீ அன்னை கிரியேஷன்ஸ் சார்​பில் பரத்​வாஜ் ஸ்ரீநிவாஸன் மிகுந்த பொருட் செலவில் தயாரித்​துள்ளார். இது வழக்​கமான நாடகமாக இல்லாமல், ஓர் இனத்​தின் அடையாளமாக காட்​சிப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

இயற்கை வளங்கள் காப்​பாற்​றப்பட வேண்​டும், வணிகம் சமுதா​யத்​துக்கு தீங்கு விளைவிக்​கும் செந்​நா​யின் குணா​திச​யங்​கள், ஒரு திசை நோக்கி தேவாங்கு தூங்​கு​வது, குலங்கள் பற்றிய குறிப்பு​கள், தமிழர்​களின் வீரம், நிலப்​பரப்​பின் தன்மை​கள், ஒருகவிஞரின் உணர்​வு​கள், போரில் கடைபிடிக்​கப்பட வேண்டிய கடமைகள் என்று ஒவ்வொரு விஷயத்​தை​யும் ஆய்ந்து, அவற்றை தொகுத்து நாடக வடிவில் எழுதி இயக்கி​யுள்​ளார்ஷங்கர்​லால் சுந்​தர்​பாய் ஷசுன் ஜெயின் கல்லூரி​யின் தமிழ்த் துறை தலைவர் முனைவர் இராணி மனோகரன்.

ஒவ்வொரு காட்​சிக்​கும் அக்கல்​லூரி மாணவிகள் உயிர்​கொடுத்​துள்ளனர். அழகாக தமிழ் பேசி, பல வருடங்கள் மேடை நாடக அனுபவம் வாய்ந்த நடிகர்​களைப் போல் அனைவரும் மெச்​சும்​படியான நடிப்​பில், ரசிகர்​களின் உணர்​வைத் தொட்டு, உள்ளத்தை உறைய வைத்​துள்ளனர்.

வேள்​பாரி​யும், கபிலரும் இந்நாடகத்​துக்கு தூண்கள் போல் அமைந்​துள்ள கதாபாத்​திரங்​கள். இருவரின் உரையாடலில் வெளிப்​படும் சமதர்ம சிந்​தனை​ கள், முருகன் - வள்ளி இருவருக்​கும் இடையேயான காதல், அக்கால தமிழர்​களின் வாழ்க்கை முறை, மூவேந்​தர்​களின் எண்ண ஓட்டங்கள் ஆகிய​வற்றை காட்​சிப்​படுத்திய விதம் அருமை.

பச்சைப்​பசேல் செடி கொடிகள், ஓங்கி உயர்ந்த மரங்​கள், ஓடை - மலை ஆகியவை எல்இடி திரை​யில் தோன்ற, மேடை​யில் நாகர் நடனம், கொற்றவை கூத்து ஆகிய​வற்​றைக் காணும்​போது வெள்​ளித்​திரை​யில் படம் ஓடும் பிரமையே ஏற்படு​கிறது.

உதவி இயக்கம் - ஸ்ரீ வைஷ்ணவி, அமிர்​தவர்​ஷினி, காவியா, டைட்​டில் டிசைன் உமா மகேஸ்​வரி, பின்புல அரங்க நிர்​மாணம், எல்இடி திரை - கலைமாமணி வி.ஒய்​.​தாஸ், ஜான்​சன், ஒப்பனை அசோக், ஒளி மனோகரன், இசை வேடராஜன், பின்னணி இசை அலெக்ஸ், ஒருங்​கிணைப்​பாளர் கோ.பாட்​டழகன், மேடை நிர்​வாகம் ஆடுதுறை பாஸ்கர் ஆகியோரின் கூட்​ட​ணி​யில் நாடகம் மெரு​கேற்​றப்​பட்​டுள்​ளது. அனைத்து க​தாபாத்​திரங்​களை​யும் கல்​லூரி ​மாணவிகளே ஏற்று நடித்ததன் மூலம் நாடகத் துறை புத்​துணர்ச்சி பெற்றுள்ளது என்​றே கூறலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x