Published : 24 Nov 2024 01:05 AM
Last Updated : 24 Nov 2024 01:05 AM

அரசு கணினி சான்றிதழ் தேர்வுமுறையில் மாற்றம்: தமிழ், ஆங்கில தட்டச்சு தேர்வுகள் புதிதாக சேர்ப்பு

சென்னை: அரசு கணினி சான்​றிதழ் தேர்​வு​ முறை​யில் மாற்றம் கொண்டு​வரப்பட உள்ளது. அதன்படி தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு தேர்​வுகள் புதிதாக சேர்க்​கப்​பட​உள்ளன. தமிழ்​நாட்​டில் தட்டச்சு, சுருக்​கெழுத்து, கணக்​கியல் தேர்​வு​களும் கணினி ஆபீஸ் ஆட்டோமேஷன் சான்​றிதழ் தேர்​வும் (Certificate course in Computer on Office Automation) ஆண்டுக்கு 2 முறை (பிப்​ர​வரி, ஆகஸ்ட்) நடத்​தப்​பட்டு வருகின்றன. இத்தொழில்​நுட்ப தேர்​வுகளை மாநில தொழில்​நுட்பக் கல்வி இயக்​ககம் நடத்துகிறது.

தமிழக அரசு துறை​களில் தட்டச்​சர், சுருக்​கெழுத்து தட்டச்சர் பணியில் சேரவும், அதேபோல், தலைமைச் செயலக நிருபர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) பதவிக்​கும் அரசு கணினி சான்​றிதழ் தேர்வு தேர்ச்சி கட்டாயம் ஆகும். இருப்​பினும், இந்த பணிகளுக்காக நடத்​தப்​படும் டிஎன்​பிஎஸ்சி போட்​டித் தேர்​வில் இத்தகுதி இல்லாமலும் கலந்​து​கொள்​ளலாம். அதேநேரம் தேர்​வில் தேர்ச்சி பெற்று பணிவாய்ப்பு பெறும் பட்சத்​தில் தகுதி​காண் பருவத்​துக்​குள் கணினி சான்​றிதழ் தேர்​வில் தேர்ச்சி பெற வேண்​டும்.

அப்போது​தான் பணிவரன்​முறை செய்​யப்​படும். டிஎன்​பிஎஸ்சி நடத்​தும் உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) தேர்வு மற்றும் மாவட்ட சுற்றுலா அலுவலர் தேர்​வுக்கு ஆன்லைனில் விண்​ணப்​பிப்​ப​தற்கே அரசு கணினி சான்​றிதழ் தேர்வு தேர்ச்சி கட்டாயம் என்பது குறிப்​பிடத்​தக்​கது. தற்போதைய தேர்​வு​முறை​யின்​படி, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று தமிழ் அல்லது ஆங்கிலம் தட்டச்சு தேர்​வில் லோயர் கிரேடு தேர்ச்சி பெற்​றவர்கள் கணினி சான்​றிதழ் தேர்வை எழுதலாம். முதல் தாள் தியரி மற்றும் 2-வது தாள் செய்​முறைத்​தேர்​வுக்கு தலா 100 மதிப்​பெண் வழங்​கப்​படு​கிறது.

இந்நிலை​யில், கணினி சான்​றிதழ் தேர்​வு​முறை​யில் மாற்றம் கொண்டு​வரப்பட உள்ளது. அதன்​படி, தமிழ், மற்றும் ஆங்கிலம் தட்டச்சு தேர்​வுகள் புதிதாக சேர்க்​கப்​படு​கின்றன. தேர்​வில் மொத்த தாள்​களின் எண்ணிக்கை 2-லிருந்து 4 ஆக உயர்த்​தப்​படு​கிறது. இதுதொடர்பாக தமிழக அரசின் உயர்​கல்​வித்​துறை செயலர் கே.கோபால் வெளி​யிட்​டுள்ள ஓர் அரசாணை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தொழில்​நுட்​பக்​கல்வி இயக்​ககத்​தால் நடத்​தப்​படும் கணினி ஆபீஸ் ஆட்டோமேஷன் சான்​றிதழ் தேர்​வில் புதிய முறையை நடைமுறைப்​படுத்த அரசு அனுமதி அளித்​துள்ளது. இத்தேர்​வுக்கான குறைந்​த​பட்ச கல்வித்​தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். தேர்​வில் மொத்தம் 4 தாள்கள் இடம்​பெறும். முதல் தாள் கணினி தொடர்பான கருத்​தியல் (தியரி) தாள். இதற்கு 50 மதிப்​பெண், தேர்வு நேரம் 60 நிமிடங்​கள். 2-வது தாள் ஆங்கில தட்டச்சு தாள் (ஒரு நிமிடத்​தில் 30 வார்த்​தைகள் தட்டச்சு செய்ய வேண்​டும்). இதற்கு 50 மதிப்​பெண். தேர்வு நேரம் 10 நிமிடங்​கள்.

3-வது தாள் தமிழ் தட்டச்சு தாள் (ஒரு நிமிடத்​தில் 30 வார்த்​தைகள் தட்டச்சு செய்ய வேண்​டும்). 50 மதிப்​பெண். தேர்வு நேரம் 10 நிமிடங்​கள். 4-வது தாள் கணினி மற்றும் ஆபீஸ் ஆட்டோமேஷன் தொடர்பான செய்​முறைத்​தேர்வு. இதற்கு 50 மதிப்​பெண். தேர்வு நேரம் 60 நிமிடங்​கள். தேர்​வில் தேர்ச்​சிபெற வேண்​டு​மானால் ஒவ்வொரு தாளி​லும் குறைந்​த​பட்சம் 40 சதவீத மதிப்​பெண் பெற வேண்​டும். அதோடு ஒட்டுமொத்த சராசரி மதிப்​பெண் குறைந்​த​பட்சம் 50 சதவீதமாக இருக்க வேண்​டும். இவ்​வாறு அ​தில் கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x