Last Updated : 12 Nov, 2024 09:18 PM

 

Published : 12 Nov 2024 09:18 PM
Last Updated : 12 Nov 2024 09:18 PM

தமிழகம் முழுவதும் டிச.14-ல் கல்வி உதவித் தொகைக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு

கோப்புப் படம்

சென்னை: கல்வி உதவித்தொகைக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 14-ம் தேதி நடைபெறுகிறது. மாணவர்கள் நவம்பர் 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் இயக்குநர் ந.லதா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் (சென்னை தவிர்த்து) அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: “தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வு தேர்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த திறனாய்வு தேர்வெழுத தகுதி பெற்றவர்களாவர்.

இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 4 வருடங்கள் வழங்கப்படும். இந்த தேர்வை ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எழுதலாம். அவர்களது பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அந்தவகையில் நடப்பாண்டுக்கான ஊரக திறனாய்வு தேர்வு டிசம்பர் 14-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்வெழுத விரும்பும் மாணவர்களின் தங்கள் பள்ளி தலைமையாசிரியர்கள் வாயிலாக நவம்பர் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.10 செலுத்த வேண்டும். மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை தலைமையாசிரியர்கள் தேர்வுத் துறை இணையதளத்தில் நவம்பர் 14 முதல் 22-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன்பின் மாணவர்களின் விண்ணப்பங்கள் மற்றும் தொகுப்பறிக்கையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் சமர்பிக்க வேண்டும். இதுதவிர விண்ணப்பித்த மாணவ, மாணவிகளின் பள்ளி அமைந்துள்ள ஒன்றியத்திலேயே தேர்வு மையம் அமைக்கப்பட வேண்டும். மேலும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x