Published : 10 Nov 2024 09:10 AM
Last Updated : 10 Nov 2024 09:10 AM

சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட படிப்புகளில் 308 காலி இடங்களை நிரப்ப நவ.15-ல் சிறப்பு கலந்தாய்வு

கோப்புப்படம்

சென்னை: சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வில் இடஒதுக்கீடு பெற்ற 308 பேர் கல்லூரிகளில் சேராததால், அந்த இடங்களை நிரப்புவதற்கான சிறப்பு கலந்தாய்வு வரும் 15-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

தமிழகத்தின் இந்திய மருத்துவம் - ஹோமியோபதி துறையின்கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்தியமருத்துவமனை வளாகத்தில் சித்தமருத்துவ கல்லூரி, யுனானி மருத்துவ கல்லூரி, திருநெல்வேலிமாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவ கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி ஆகியவை உள்ளன.

இந்த 5 அரசு கல்லூரிகளில் உள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள்வழங்கப்படுகிறது. மீதமுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதேபோல, 30 தனியார்கல்லூரிகளில் உள்ள 1,980 இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது.

மீதமுள்ள இடங்களில் மாநில அரசுக்கு 65 சதவீதம், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 35 சதவீதம் உள்ளன. அரசு ஒதுக்கீடு இடங்கள், தனியார்கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது.அரசு கல்லூரிகளின் 15 சதவீத இடங்களுக்கு மட்டும் மத்திய அரசு தனியாக கலந்தாய்வு நடத்துகிறது.

சித்தா (பிஎஸ்எம்எஸ்), ஆயுர்வேதா (பிஏஎம்எஸ்), யுனானி(பியுஎம்எஸ்), ஹோமியோபதி(பிஎச்எம்எஸ்) ஆகிய பட்டப் படிப்புகளுக்கு 2024-25-ம் கல்வி ஆண்டுமாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு, நீட் தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியான மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, கடந்த மாதம் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது.

கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரம்பின. ஆனால், கலந்தாய்வில் பங்கேற்று இடஒதுக்கீடு பெற்று கல்லூரிகளில் சேராததால், 308 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களைநிரப்புவதற்கான சிறப்பு கலந்தாய்வு சென்னை அரும்பாக்கம் சித்தா மருத்துவமனை வளாகத்தில் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து மேலும் விவரங்களை www.tnhealth.tn.gov.in என்ற சுகாதார துறை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x