Published : 04 Nov 2024 03:22 AM
Last Updated : 04 Nov 2024 03:22 AM
சென்னை: அனுமதியின்றி பெயர், லோகோ மற்றும் வலைதளத்தை தவறாக பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று யுஜிசி எச்சரித்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பு: முறையான அனுமதி, அங்கீகாரம் பெறாமல் யுஜிசியின் லோகோவை (இலச்சினை) பல்வேறு நிறுவனங்கள் பயன்படுத்தி வருவது கவனத்துக்கு வந்துள்ளது. இவை அங்கீகரிக்கப்படாத, தவறான செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுவதால் மாணவர்கள், பங்குதாரர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
அதன்படி யுஜிசியை பிரதிநிதித்துவப்படுத்தும், அமைப்பு சார்பில் செயல்படுவதற்கும் எந்த உயர்கல்வி நிறுவனங்களையோ அல்லது சம்பந்தப்பட்ட பங்குதாரர்
களையோ நியமிக்கவில்லை. மேலும், எவருக்கும் யுஜிசியின் பெயர், லோகோ மற்றும் இணையதளத்தை பயன்படுத்தவும் அனுமதி வழங்கவில்லை. எனினும் சில அங்கீகரிக்கப்படாத நபர்கள், தனியார் நிறுவனங்கள் யுஜிசியின் பெயர் மற்றும் லோகோவை தவறான ஆதாயங்களுக்காக தவறுதலாக பயன்படுத்துகிறார்கள்.
எனவே, பொதுமக்கள் உட்படஅனைவரும் இதுசார்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதுபோல் யாரும் தவறுதலாக பயன்படுத்துவது தெரிய வந்தால் உடனே யுஜிசி கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT