Published : 26 Oct 2024 02:12 AM
Last Updated : 26 Oct 2024 02:12 AM
சென்னை: அக்.28 முதல் நவம்பர் 3 வரையிலான ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் - 2024’ முன்னிட்டு, பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான போட்டிகளை இந்தியன் வங்கி மற்றும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து நடத்துகின்றன. இந்த போட்டிகளில் ஆர்வமுடைய மாணவர்களும், ஆசிரியர்களும் பங்கேற்கலாம்.
4 மாவட்டங்களுக்கான போட்டி ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் - 2024’-ஐ ஒட்டி பள்ளி மாணவ -மாணவிகளிடையே ஊழல் எதிர்ப்பு குறித்த சமூக விழிப்புணர்வைப் பரப்பும் வகையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 6 முதல் 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ஜூனியர் பிரிவிலான ஓவியப் போட்டியும், ‘வளமான தேசத்துக்கு நேர்மை எனும் கலாச்சாரம்’ எனும் கருப்பொருளில் பள்ளி ஆசிரியர்களுக்கான கட்டுரைப் போட்டியும் நடைபெற உள்ளன.
மாநில அளவில் விநாடி வினா தமிழகத்தைச் சேர்ந்த 9 முதல் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு சீனியர் பிரிவிலான இணையவழி விநாடி வினா போட்டியும் நடைபெற உள்ளது. இப் போட்டியின் நாலெட்ஜ் பார்ட்னராக எக்ஸ் க்யூஸ் ஐடி இணைந்துள்ளது.மாநில அளவிலான இணையவழி விநாடி வினா போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://www.htamil.org/IBQUIZ என்ற ஆன்லைன் லிங்க்கில் அக்.27-ம் தேதி மதியம் 12 மணிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். முதற்கட்ட விநாடி வினா நிகழ்வு அக்.27-ம் தேதி மாலை 4 மணிக்கு தொடங்கும். போட்டியில் பங்கேற்க பதிவுக் கட்டணம் ஏதுமில்லை. கூடுதல் விவரங்களுக்கு 9940268686 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT