Published : 18 Oct 2024 06:23 AM
Last Updated : 18 Oct 2024 06:23 AM
சென்னை: மாநில ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்கள், அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் மற்ற மாநிலங்களில் சேர்ந்ததால் 1,143 இடங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், படிப்புக்கு ரூ.13.5 லட்சம், அரசு ஒதுக்கீட்டுக்கு ரூ.4.5 லட்சம் என மாநில அரசு கட்டணமாக நிர்ணயித்துள்ளது. ஆனால்,சுயநிதிக் கல்லூரிகளில் கணக்கில்வராமல் பல லட்சம் ரூபாய் மாணவர்களிடம் வசூலிக்கப்படுகிறது.
வேறு மாநிலங்களில் இடம்: இதனால், சுயநிதி கல்லூரி களில் சேருவதைத் தவிர்த்து, அகில இந்திய ஒதுக்கீட்டில், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இடங் கள் பெற்று கல்லூரிகளில் சேர்ந் துள்ளனர்.
அதேபோல், அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் பெற்ற மாணவர்களும், எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலை.யில் இடம்பெற்று சென்றுள்ளனர். அதன்படி, அரசு மருத்துவ கல்லூரிகளில் 59 எம்பிபிஎஸ், 62 பிடிஎஸ், மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 503 எம்பிபிஎஸ், 519 பிடிஎஸ் என, மொத்தம் 1,143 இடங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அடுத்த கட்ட கவுன்சிலிங்கில்... இதுகுறித்து, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகஇயக்குநர் சங்குமணி கூறும் போது, ‘‘அகில இந்திய மருத்துவஒதுக்கீட்டில் இடங்கள் பெற்றதால், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இடங்கள் பெற்றவர்கள் திரும்ப ஒப்படைத்துள்ளனர். இந்த இடங்கள் அடுத்தகட்ட கவுன்சிலிங்கில் நிரப்பப் படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT