Published : 17 Oct 2024 04:45 AM
Last Updated : 17 Oct 2024 04:45 AM

பாலிடெக்னிக் தேர்வு நவ.12-ம் தேதி தொடங்குகிறது: புதிய அட்டவணை வெளியீடு

சென்னை: பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட புதிய அட்டவணையை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தொழில்நுட்ப தேர்வுகள் வாரிய தலைவரும், தொழில்நுட்ப கல்வி ஆணையருமான டி.ஆபிரகாம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பாலிடெக்னிக் பொறியியல் டிப்ளமா படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் நவம்பர் 12-ம் தேதி தொடங்கி 27-ம் தேதிவரை தொடர்ந்து (ஞாயிறு நீங்கலாக) நடைபெறும். தினமும் காலை9.30 முதல் மதியம் 12.30 மணி வரையும், பிற்பகலில் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் தேர்வு நடைபெறும்.

செய்முறை தேர்வுகள் அக்டோபர் 25-ம் தேதி தொடங்குகின்றன. தேர்வு தொடங்குவதற்கு 15 நாட்கள்முன்பாக, தொழில்நுட்ப கல்வி இயக்கக இணையதளத்தில் (www.dte.tn.gov.in) முழு விவரங்கள் அடங்கிய தேர்வு அட்டவணை வெளியிடப்படும். தேர்வு பணிகள் முடிவடைந்து, அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் டிசம்பர் 23-ம் தேதி தொடங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x