Published : 27 Sep 2024 02:30 PM
Last Updated : 27 Sep 2024 02:30 PM

தொலைதூரக் கல்வி தேர்வுக்கான ஹால் டிக்கெட் பதிவேற்றம்: சென்னை பல்கலை., அறிவிப்பு

சென்னை: தொலைதூரக் கல்வி தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.ஏழுமலை இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் இளங்கலை, முதுகலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வுகள் (2024 ஜுன் பருவம்) அக்டோபர் 5ம் தேதி முதல் தொடங்குகின்றன. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் தொலைதூரக் கல்வி நிறுவன இணையதளத்தில் (www.ideunom.ac.in) இன்று வெள்ளிக்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். மேலும், தேர்வுக்கால அட்டவணையும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.” என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x