Published : 24 Sep 2024 10:34 PM
Last Updated : 24 Sep 2024 10:34 PM

“பள்ளிகளில் காலாண்டு விடுமுறை நீட்டிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்” - அமைச்சர் அன்பில் மகேஸ்

ராமேசுவரம் கலாம் தேசிய நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

ராமேசுவரம்: பள்ளிகளில் காலாண்டு விடுமுறை நீட்டிப்பது குறித்து, துறை சார்ந்து பேசி முடிவெடுத்த பின்னர் அறிவிக்கப்படும், என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தரம் மற்றும் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டார். இன்று (செப்.24) மாலை ராமேசுவரத்தில் உள்ள மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் தேசிய நினைவகத்த்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இதுவரை 3500 பள்ளி கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் 3500 கட்டிட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரத்தில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க அதிகாரிகளுடன் ஆராய்ந்த பின் அதற்கான ஏற்பாடுகள் நடைபெறும். பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அறிவித்தப்படி விடப்படும், நீட்டிப்பது குறித்து துறை சார்ந்து பேசிவெடுத்த பின்னர் அறிவிக்கப்படும்” இவ்வாறு அன்பில் மகேஸ் தெரிவித்தார். ராமேசுவரம் கலாம் தேசிய நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x