Published : 12 Sep 2024 05:19 AM
Last Updated : 12 Sep 2024 05:19 AM

முதுநிலை மேலாண்மைப் படிப்புக்கான ‘கேட்’ நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

கோப்புப் படம்

சென்னை: முதுநிலை மேலாண்மைப் படிப்புகளில் சேருவதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு பட்டதாரிகள் நாளைக்குள் (செப்டம்பர் 13) விண்ணப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஐஎம் போன்ற தேசிய முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை மேலாண்மை படிப்புகளில் சேர கேட்(Common Admission Test - CAT)நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். அதன்படி நடப்பாண்டுக்கான கேட்தேர்வு நாடு முழுவதும் 170 மையங்களில் வரும் நவம்பர் 24-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வை கொல்கத்தா ஐஐஎம் நடத்தவுள்ளது.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கிநடைபெற்று வருகிறது. பட்டதாரிகள் பலர் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கிடையே `கேட்' தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் நாளையுடன் (செப்.12) நிறைவு பெறுகிறது.

இதையடுத்து, விருப்பமுள்ள பட்டதாரிகள் https://iimcat.ac.in எனும் வலைதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்ப கட்டணமாக எஸ்சி/எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.1,250-ம், மற்ற தேர்வர்கள் ரூ.2500-ம் செலுத்த வேண்டும். தகுதியான தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் நவம்பர் 5-ம் தேதி வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் ஜனவரி 2-வது வாரத்தில் வெளியாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x