Published : 03 Sep 2024 04:00 PM
Last Updated : 03 Sep 2024 04:00 PM

ராம்ராஜ் காட்டன் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - அன்பாசிரியர் விருது’ வழங்கும் விழா: சென்னையில் செப்.6-ல் அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்குகிறார்

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் ராம்ராஜ் காட்டன் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - அன்பாசிரியர் விருது’ வழங்கும் நிகழ்வு செப்.6-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த நிகழ்வின் பங்குதாரர் களாக டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா இணைந்து வழங்குகிறது. லெட்சுமி செராமிக்ஸ், வர்த்தமானன் பதிப்பகம், பொன்வண்டு டிடர்ஜெண்ட் நிறுவனம், சுராஸ்ஸ்கூல் கைடு ஆகியன இணைந் துள்ளன.

கடந்த 3 ஆண்டுகளாக விருது: மாணவர்களுக்கு வழக்கமான பாடம் கற்பிப்பதோடு நின்று விடாமல், மாறுபட்ட சிந்தனை, புதுமை உணர்வோடு, மாணவர் களின் திறன்களை வளர்த்து, சமூக அக்கறை ஊட்டி, நற்பண்புகளைப் போதித்து, பள்ளியையும் மேம்படுத்தும் அர்ப்பணிப்பு மிக்க சிறந்தஆசிரியர்களைத் தேர்வு செய்துகடந்த 3 ஆண்டுகளாக ‘அன்பாசிரியர்’ விருதுகள் வழங் கப்பட்டன.

அந்த வகையில் 4-ம் ஆண்டாக‘அன்பாசிரியர் விருது’கள் வழங்கும் நிகழ்வு சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையிலுள்ள வாணி மஹாலில் செப்.6-ம் தேதி (வெள்ளி) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

41 ஆசிரியர்களுக்கு விருது: இவ்விருதுக்கு தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 500-க்கும்மேற்பட்ட ஆசிரியர்கள் ஆன்லை னிலும், தபால் வழியேயும் விண்ணப்பித்தனர். அதில் 150 ஆசிரியர்கள் முதல்கட்டமாகத் தேர்வுசெய்யப்பட்டனர். அந்த ஆசிரியர்களை மூத்த கல்வியாளர்கள் அடங்கிய தேர்வுக் குழுவினர், ஆன்லைன் வழி நேர்காணல் செய்து, அதிலிருந்து 39 ஆசிரியர்கள் ‘அன்பாசிரியர் விருது’ பெறவும், 2 ஆசிரியர்கள் ‘முன்மாதிரி ஆசிரியர் விருது’ பெறவும் தேர்வு செய்தனர்.

தேர்வு செய்யப்பட்ட 41 ஆசிரியர்களுக்கும் வரும் வெள்ளியன்று நடைபெறவுள்ள விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விருதுகளை வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார். இவ்விழாவில் அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்கலாம்.

20% சிறப்பு தள்ளுபடி: இவ்விழாவில் பங்கேற்பவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ வெளியிட்டுள்ள நூல்களுக்கு 20 சதவீத சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x