Published : 04 Aug 2024 06:34 AM
Last Updated : 04 Aug 2024 06:34 AM

சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் தேர்வு வெளியிடப்பட்டன. தகுதியுள்ள மாணவர்கள் மட்டும் மறுமதிப்பீட்டுக்கு ஆகஸ்ட் 6 முதல் 10-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் வி.ஏழுமலை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சென்னை பல்கலைக்கழக இளங்கலை பட்டப்படிப்பு (முதல் செமஸ்டர் முதல் 5-வது செமஸ்டர் வரை), முதுகலை படிப்பு மற்றும் தொழில்சார் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் சனிக்கிழமை (நேற்று) வெளியிடப்பட்டன. இளங்கலை படிப்பில் 2021-2022-ம் கல்வி ஆண்டில் சேர்ந்த மாணவர்களும், அதேபோல், முதுகலை படிப்பு மற்றும் தொழில்சார் படிப்பு எனில் 2022-2023-ம் கல்வி ஆண்டில் சேர்ந்தோரும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர். அவர்கள் தாங்கள் படித்தகல்லூரி வாயிலாக ஆகஸ்ட் 6 முதல் 10-ம் தேதி வரை ஆன்லைனில் (www.unom.ac.in) விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீட்டு கட்டணம்தாள் ஒன்றுக்கு ரூ.1000 ஆகும்.

ஆக.7 முதல் விண்ணப்பிக்கலாம்: உடனடி தேர்வுக்கு தகுதியுள்ளஇளங்கலை, முதுகலை மாணவர்கள் ஆகஸ்ட் 7 முதல் 12-ம் தேதிவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணம் இளங்கலை படிப்புக்கு ரூ.300, முதுகலை படிப்புக்கு ரூ.350 தொழில்சார் படிப்புக்கு ரூ.600 கட்டணம் செலுத்த வேண்டும். உடனடி தேர்வு ஆகஸ்ட் 31-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.

மேலும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் இளங்கலை மாணவர்கள் ஆகஸ்ட் 6 முதல் 10-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.300 செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x