Published : 19 Jul 2024 05:20 AM
Last Updated : 19 Jul 2024 05:20 AM

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா: மேயர் பிரியா வழியனுப்பி வைத்தார்

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 4 மற்றும் 5-ம் வகுப்பு பயிலும் 1255 மாணவர்கள் கல்விசுற்றுலாவாக வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்டவற்றுக்கு நேற்று சென்றனர். அவர்களை மேயர் ஆர்.பிரியா வழியனுப்பி வைத்தார்.

சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த ஆண்டு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 11-ம்வகுப்பு மாணவர்கள் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். அதன்தொடர்ச்சியாக, சென்னை பள்ளிமாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவித்து மேம்படுத்தும் விதமாக 2024-25 கல்வியாண்டில் 208 மாநகராட்சி தொடக்கப் பள்ளிகள்மற்றும் 130 நடுநிலைப் பள்ளிகளில் 4 மற்றும் 5-ம்வகுப்பு பயிலும்24 ஆயிரத்து 700 மாணவர்களைகல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ.47கோடியே 25 லட்சம் நிதியை மேயர்ஆர்.பிரியா மாநகராட்சி பட்ஜெட்டில் ஒதுக்கியிருந்தார்.

அதன்படி, சென்னையை சுற்றியுள்ள கிண்டி சிறுவர் பூங்கா, பிர்லா கோளரங்கம், அண்ணாநூற்றாண்டு நூலகம், எழும்பூர் அருங்காட்சியகம், வண்டலூர்உயிரியல் பூங்கா ஆகிய இடங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல முடிவுசெய்யப்பட்டது. இவர்கள்ஜூலை முதல் டிசம்பர் மாதத்துக்குள் அழைத்துச்செல்லப்பட உள்ளனர்.

முதல்கட்டமாக மாணவர்களை கல்வி சுற்றுலாவுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில்மாநகராட்சி மேயர்ஆர்.பிரியா பங்கேற்று, 18 மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த 1255 மாணவர்களை 24 பேருந்துகளில் கல்வி சுற்றுலாவுக்கு அனுப்பி வைத்தார்.

வரும் டிசம்பர் மாதம் வரைசுற்றுலா அழைத்துச் செல்ல மொத்தம் ரூ.31 லட்சத்து 29 ஆயிரம் செலவில், 298 மாநகர பேருந்துகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் மேயர் பிரியா செய்தியாளர்களிடம் கூறும்போது, தென்மேற்கு பருவமழை காலத்தில் சென்னையில் வழக்கத்துக்கு மாறாக அதிக மழை பெய்து வருகிறது. மழைநீர் தேங்காத வகையில் மாநகராட்சி அகற்றி வருகிறது.

மழைகாலத்தில் டெங்குபரவலை தடுக்கவும் நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது அமெரிக்காவில் சான் ஆண்டோனியோ நகரத்தில் ஆறுகள் சிறப்பாக சீரமைக்கப்பட்டுள்ளன. அதை நேரில்சென்று பார்வையிட்டேன். அதேதொழில்நுட்பத்தில் கூவம் ஆற்றைசீரமக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x