Published : 04 Jul 2024 09:12 AM
Last Updated : 04 Jul 2024 09:12 AM

ரொபோட்டிக்ஸ், டிஜிட்டல் போட்டோகிராபி படிப்பு: கிண்டி அரசு ஐடிஐ-யில் நேரடி மாணவர் சேர்க்கை

கோப்புப்படம்

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கிண்டி, அரசின் ஐடிஐ-யில் டெஸ்க் டாப் பப்ளிஷிங் ஆபரேட்டர்(டிடிபி), டிஜிட்டல் போட்டோகிராபர், டிராப்ட்ஸ்மேன் (மெக்கானிக்கல்) பிட்டர், டூல் டை மேக்கர், டர்னர் , புட் புராடக்சன், புட் பீவரேஜ் சர்வீஸ் அசிஸ்டெண்ட், ஸ்மார்ட்போன் டெக்னீசியன் மற்றும் ஆப் டெஸ்டர், சிஎன்சி மெஷினிங், விர்ச்சுவல் வெரிபயர் (மெக்கானிக்கல்), இண்டஸ்ட்ரீயல் ரொபோட்டிக்ஸ், டிஜிட்டல் உள்ளிட்ட தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சிகளில், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம். படிப்பில் சேர கடைசி நாள்ஜூலை 15. இலவச பயிற்சி, சீருடை, வரைபடக்கருவிகள், மாதம் ரூ.750 உதவித்தொகை வழங்கப்படும். விபரங்களுக்கு 044-22501350 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலா்ம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x