Published : 30 Jun 2024 09:48 AM
Last Updated : 30 Jun 2024 09:48 AM

யுஜிசி நெட் மறுதேர்வு ஆக.21-ல் தொடங்குகிறது

கோப்புப்படம்

சென்னை: முறைகேடு புகார்கள் காரணமாக ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு மீண்டும் கணினி வழியில் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

நீட் மற்றும் உதவி பேராசிரியர் தகுதிக்கான யுஜிசி நெட் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து நெட் தேர்வை மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது.

இதுதவிர தொடர்ந்து ஜூலை 25 முதல் 27-ம் தேதி வரை நடைபெறவிருந்த சிஎஸ்ஐஆர் நெட் தேர்வும் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட மற்றும் தள்ளிவைக்கப்பட்ட நுழைவுத் தேர்வுகளுக்கான மாற்று தேதி விவரங்களை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு: ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர்பட்டப் படிப்புகளில் சேருவதற்கான தேசிய பொது நுழைவுத் தேர்வு (என்சிஇடி) கணினி வழியில் ஜூலை 10-ம் தேதி நடைபெறும். கடந்த ஜூன் 12-ம் தேதிநடத்தப்படவிருந்த இத்தேர்வானது தொழில்நுட்பக் கோளாறால் தள்ளிவைக்கப்பட்டது.

இதேபோல், யுஜிசி நெட் மறுத்தேர்வு ஆக.21 முதல் செப்.4-ம் தேதி வரை கணினி வழியில் நடைபெறும். ஏற்கெனவே நடைபெற்ற எழுத்துத் தேர்வு இந்த முறை கணினி வழியில் நடத்தப்படும். அதேபோல், சிஎஸ்ஐஆர் நெட் ஜூலை 25 முதல் 27-ம் தேதி வரை நடைபெறும்.

இதுதவிர முதுநிலை ஆயுஷ் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஏற்கெனவே அறிவித்தபடி ஜூலை 6-ம் தேதி நடத்தப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை http://www.nta.ac.in/ வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x