Published : 03 Jun 2024 03:26 PM
Last Updated : 03 Jun 2024 03:26 PM
சென்னை: பிளஸ் 2 துணை தேர்வு ஜூன் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 1-ம் தேதி முடிவடைகிறது. அதேபோல், பிளஸ் 1 துணை தேர்வு ஜூலை 2-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வுகள் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராம வர்மா அறிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழகப் பள்ளிக் கல்வியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதையடுத்து மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி, மாநிலம் முழுவதும் 83 மையங்களில் ஏப்.1-ல் தொடங்கி 13-ம் தேதியுடன் நிறைவு பெற்றது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 6ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, மொத்தம் 94.56% பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த 2023 ஆம் ஆண்டு 94.03% விகிதம் தேர்ச்சி பதிவாகியிருந்த நிலையில் இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்திருந்தது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவிகள் 96.44%, மாணவர்கள் 92.37% தேர்ச்சி பெற்றிருந்தனர். வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம். பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதிய மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் வெற்றி பெற்றிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT