Published : 28 May 2024 06:15 AM
Last Updated : 28 May 2024 06:15 AM

சென்னை விஐடி-யில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கணினி பயிலரங்கம்

சென்னை விஐடி-யில் நேற்று நடைபெற்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கணினி பயிலரங்க நிறைவுநாள் நிகழ்ச்சியில், சிறந்த மாற்றுத்திறனாளிகளுக்கு போபால் விஐடி அறங்காவலர் ரமணி பாலசுந்தரம் மடிக்கணினி மற்றும் விருதுகளை வழங்கினார். உடன், ஜெம் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் அசோகன் மற்றும் தர்ஷிணி தொண்டு நிறுவன அறங்காவலர்கள் உள்ளனர்.

சென்னை: சென்னை விஐடி மற்றும் தாய்க்கரங்கள் அறக்கட்டளை சார்பில்,பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கணினி பயிலரங்கம் விஐடி வளாகத்தில் மே 20-ம் தொடங்கியது.

தர்ஷிணி தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த 8 நாள் பயிலரங்கை விஐடிதுணைத் தலைவர் சேகர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன், தர்ஷிணி தொண்டு நிறுவன நிர்வாகி சவுமியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த பயிலரங்கில் தமிழகம் முழுவதும் இருந்தும், பார்வைற்ற மாற்றுத்திறனாளிகள் 54 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு படங்கள், ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளை ஆவணப்படுத்துவதில் அடிப்படை கணினி பயன்பாடு முதல் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்ப பயன்பாடு வரை பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிலரங்கின் நிறைவு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சிறந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மடிக்கணினி மற்றும் விருதுகளையும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களையும் போபால் விஐடி அறங்காவலர் ரமணி பாலசுந்தரம் வழங்கினார். ஜெம் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் அசோகன்மற்றும் தர்ஷிணி தொண்டு நிறுவன அறங்காவலர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x