Published : 17 May 2024 09:12 PM
Last Updated : 17 May 2024 09:12 PM
சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. அதேபோல், பொறியியல் படிப்பில் சேர இதுவரை 1 லட்சத்து 62 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 5-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி நிலவரப்படி, இதுவரை 2 லட்சத்து 5 ஆயிரத்து 448 மாணவ, மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாககவும், அவர்களில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 815 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியுள்ளதாக கல்லூரி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
அதேபோல், பொறியியல் படிப்புகளில் சேரவும் மாணவ மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். மாலை 6 மணி நிலவரப்படி, 1 லட்சத்தை 62 ஆயிரத்து 486 பேர் விண்ணப்பித்திருப்பதாகவும், அவர்களில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 314 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியுள்ளதாகவும், 71 ஆயிரத்து 516 பேர் தேவையான சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்திருப்பதாகவும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் புருஷோத்தமன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT