Published : 16 May 2024 07:54 PM
Last Updated : 16 May 2024 07:54 PM
புதுடெல்லி: இந்திய ஆய்வு (சர்வே) மூலம் தயாரித்து வழங்கப்பட்ட இந்திய வரைபடங்களை மட்டுமே பயன்படுத்துமாறு கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுமம் (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக யுஜிசி செயலர் மணீஸ் ஆர்.ஜோஷி அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘மத்திய சட்ட அமைச்சகத்தால் 1990-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குற்றவியல் சட்டத் திருத்தத்தின் படி சர்வே ஆஃப் இந்தியாவால் வெளியிடப்பட்ட இந்திய வரைபடங்களுடன் ஒத்துப்போகாத இந்திய வரைபடத்தை வெளியிடும் நபருக்கு அபராதம் அல்லது 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும். அல்லது, அதிகபட்சமாக இரண்டுமே சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
எனவே உயர்கல்வி நிறுவனங்கள் இந்த சட்டத்துக்கு இணங்குவதை உறுதி செய்து, தங்களது கல்லூரிகளில் இந்திய ஆய்வு மூலம் தயாரித்து வழங்கப்பட்ட இந்திய வரைபடங்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதையொட்டி குற்றவியல் சட்டத் திருத்த சட்டத்தின் இந்திய அரசிதழ் நகலும் தகவலுக்காக இணைக்கப்பட்டுள்ளது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT