Published : 10 May 2024 04:30 AM
Last Updated : 10 May 2024 04:30 AM

அரசு ஐடிஐ-க்களில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் அமுதவல்லி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் தமிழகம் முழுவதும் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) இயங்கி வருகின்றன.

இவற்றில் 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர்சேர்க்கை நடைபெற உள்ளது. அரசு ஐடிஐ-யில் சேர 8-ம் வகுப்பு அல்லது 10-ம்வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி மே 10 (இன்று) முதல் ஜூன் 7-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் 136 உதவி மையங்களில் விண்ணப்பிக்கலாம். இந்த மையங்களின் பட்டியல் மற்றும் தொலைபேசி விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால்94990-55689 என்ற செல்போன் எண் வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x