Published : 10 May 2024 05:00 AM
Last Updated : 10 May 2024 05:00 AM
சென்னை: பிளஸ் 2 படித்துவிட்டு அடுத்து என்ன படிப்பது, எங்கே படிப்பது, எந்த படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என பல கேள்விகள் மாணவர்களுக்கு எழும். அத்தகைய மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் வழங்கும் வகையில் விஐடி சென்னை வழங்கும் ‘இந்துதமிழ் திசை - உயர்வுக்கு உயர்கல்வி’ எனும் ஆன்லைன் தொடர்நிகழ்வின் 8-வது பகுதி நாளைமாலை 6 மணிக்கும், 9-வது பகுதிநாளை மறுநாள் மாலை 6 மணிக்கும் நடைபெற உள்ளன.
இந்த நிகழ்வை ஈஸ்வரி இன்ஜினீயரிங் கல்லூரி, சவீதா இன்ஜினீயரிங் கல்லூரி, ஆல்பா காலேஜ்ஆஃப் இன்ஜினீயரிங் ஆகியவை இணைந்து வழங்குகின்றன.
வரும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள 8-வது பகுதியில் ‘எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன் அண்ட் அலைடு ஸ்டீரீம்ஸ் துறையில் உள்ள வாய்ப்புகள்’ எனும் தலைப்பில், விஐடி சென்னை ஸ்கூல் ஆஃப் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் துறை பேராசிரியர் டாக்டர் ஏ.சிவசுப்பிரமணியன், பாதுகாப்பு அமைச்சகத்தின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவன விமானப் பிரிவின் தலைமை மேலாளர் கே.செல்வி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.
வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள 9-வது பகுதியில் ‘பயோ டெக் அண்டு பயோ மெடிக்கல் இன்ஜினீயரிங் படிப்புகள் மற்றும்வேலைவாய்ப்புகள்’ எனும் தலைப்பில், ஆல்பா காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் முதல்வர் டாக்டர் பி.செளம்யா, கோவை பாரதிதாசன் பல்கலைக்கழக டிஐஏ சிறப்பு மைய கூடுதல் இயக்குநர் டாக்டர் கே.கதிர்வேலு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். இந்த இருநிகழ்வுகளையும் ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு ஒருங்கிணைத்து நடத்துகிறார்.
இந்த நிகழ்வில், பிளஸ் 2 முடித்த பிறகு படிக்க வேண்டிய பலவகையான படிப்புகள், அதற்கான நுழைவுத்தேர்வுகள், கல்விக்கட்டணம், உதவித்தொகை பெறும்வழிமுறைகள், துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. நிகழ்வின் நிறைவாக, மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு வல்லுநர்கள் பதிலளிக்க உள்ளனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்க கட்டணம் ஏதுமில்லை. பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/UUK004 என்ற லிங்க்-ல் அல்லது இத்துடன் உள்ள க்யூஆர் கோடு மூலமாகப் பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம். முதலில் பதிவுசெய்யும் 20 மாணவர்களுக்கு டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, டாக்டர் வி.டில்லிபாபு எழுதிய ‘விண்ணும் மண்ணும்’ எனும் நூல் பரிசாக வழங்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment