Published : 19 Apr 2024 04:22 AM
Last Updated : 19 Apr 2024 04:22 AM
சென்னை: திறந்தநிலை, இணையவழி படிப்புகளில் சேருவதற்கு முன்பு அதற்கான அங்கீகாரத்தை மாணவர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டு மென ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமத்தின் (ஏஐசிடிஇ) உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
யுஜிசி ஒப்புதலுடன் அனுமதி: பொறியியல், தொழில்நுட்பம், திட்டமிடல், ஓட்டல் மேலாண்மை, உணவு தொழில்நுட்பம், பயன்பாட்டு கலைகள், கைவினைப் பொருட்கள் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றில் திறந்தவெளி, தொலைதூரக் கற்றல் மற்றும் இணையவழியில் இளநிலை, முதுநிலை, பட்டயப் படிப்புகளை வழங்க எந்தவொரு உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுமதி கிடையாது.
இதுதவிர மேலாண்மை, கணினி பயன்பாடுகள், செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், சைபர் பாதுகாப்பு, பிளாக் செயின் மற்றும் சுற்றுலா பயணம் ஆகியவற்றில் திறந்தநிலை மற்றும்தொலைதூரக் கற்றல், இணையவழியில் மாணவர்களுக்கு கற்றுதர முதுநிலை, சான்றிதழ் மற்றும்பட்டயப் படிப்புளுக்கு மட்டும் ஏஐசிடிஇ மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) ஒப்புதலுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து மாணவர்களும் இத்தகைய படிப்புகளில் சேரும் முன்பு அதற்கான அங்கீகாரஅனுமதியை உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே நாடு முழுவதும்பல்வேறு உயர்கல்வி நிறுவனங்கள் முறையான அங்கீகாரமின்றி இணையவழி படிப்புகளை பயிற்றுவிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. அதையொட்டி இந்த அறிவிப்பைஏஐசிடிஇ தற்போது வெளியிட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT