Published : 27 Mar 2024 06:12 AM
Last Updated : 27 Mar 2024 06:12 AM
சென்னை: தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் அரசு கணினி சான்றிதழ் தேர்வு (COA) ஆண்டுக்கு இரண்டு முறை (பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட்) நடத்தப்படுகிறது. தமிழக அரசு துறைகளில் தட்டச்சர் பணியில் சேருவதற்கும் ஒருசில துறைகளில் இளநிலை உதவியாளர் பணியில் சேரவும் அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சி அவசியம்.
அதுபோல, உதவி சுற்றுலா அலுவலர் மற்றும் மாவட்ட சுற்றுலா அலுவலர் நேரடி தேர்வுக்கும் இத்தேர்ச்சி கட்டாயம் ஆகும். இந்நிலையில், 2024-ம் ஆண்டுக்கான முதலாவது அரசு கணினி சான்றிதழ் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. தேர்வு முடிவுகளை தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் www.tndtegteonline.in என்ற இணையதளத்தில் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT