Published : 20 Feb 2024 06:08 AM
Last Updated : 20 Feb 2024 06:08 AM
வண்டலூர்: அறிவியல் தொழில் நுட்பத்தில் தங்களை வளர்த்து கொண்டு மாணவர்கள் அதிக கண்டுபிடிப்புகளை வழங்க வேண்டும் என்று அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் செயலாளர் டாக்டர் என்.கலைசெல்வி தெரிவித்துள்ளார். பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசன்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் 13-வது பட்டமளிப்பு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் 93 முனைவர் பட்டமும், 599 முதுகலை, 1,712 இளங்கலை பட்டம் உட்பட மொத்தம் 2,404 பட்டதாரிகள் பட்டம் பெற்றனர். முதலிடத்தை பிடித்த 53 மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
இதில் 32 மாணவர்கள் இளங்கலை பிரிவிலும், 21 மாணவர்கள் முதுகலை பிரிவிலும் பதக்கம் பெற்றனர். நேற்றைய விழாவில் 671 மாணவர்கள் நேரில் பட்டம் பெற்றனர், 1,680 மாணவர்கள் ஆன்லைனில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
பட்டங்களை அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் செயலாளரும், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி துறையின் தலைமை இயக்குநர் டாக்டர் என்.கலைசெல்வி மாணவர்களுக்கு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் 40 வயதுக்குள் இருப்பவர்கள் அதிகம் உள்ளனர்.
இவர்களின் வரும் 20 ஆண்டு பங்களிப்பு மிக முக்கியமானது. அதில் வரும் 7 ஆண்டு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இவர்களின் பங்களிப்பு தான் இந்தியா மட்டுமின்றி உலகம் நாடுகளும் முன்னேற்றம் அடையும். எந்த நாடும் தன்னிச்சையான வளர முடியாது. வேறு ஒரு நாட்டையும் சார்ந்து தான் முன்னேற முடியும்.
இந்தியாவின் வளர்ச்சிதான் மற்ற நாடுகளின் வளர்ச்சிக்கு முக்கியமாக இருக்கும். இன்றைய காலகட்டத்தில் அறிவியல் தொழில் நுட்ப துறைதான் உலகத்தில் உள்ள அனைத்துக்கும் பொதுவானதாக உள்ளது. மாணவர்கள் அறிவியல் தொழில் நுட்பத்தில் தங்களை வளர்த்து கொண்டு அதிக கண்டு பிடிப்புகளை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசன்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி வேந்தர் குர்ரத் ஜமீலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.வண்டலூர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசண்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் 13-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், டிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் டாக்டர் கலைச்செல்வி கலந்துகொண்டு, சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியருக்கு தங்கப்பதக்கம் மற்றும் பட்டங்களை வழங்கினார்.
உடன் வேந்தர் குர்ரத் ஜமீலா, இணைவேந்தர் அப்துல் காதர் ஏ.ரஹ்மான் புஹாரி, இணை துணைவேந்தர் என்.தாஜுதீன், துணைவேந்தர் டி.முருகேசன், பதிவாளர் என்.ராஜா ஹுசைன், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் எஸ்.காஜாமொஹிதீன் உள்ளிட்டோர். படம்: எம்.முத்துகணேஷ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT