Published : 11 Feb 2024 05:44 AM
Last Updated : 11 Feb 2024 05:44 AM

நீட் தேர்வுக்கு மார்ச் 9 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: 2024-25 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட13 மொழிகளில் மே 5-ம் தேதிநேரடி முறையில் நடைபெற உள்ளது.

இதற்கான விண்ணப்பப்பதிவு நேற்று முன்தினம் இரவுதொடங்கியது. விருப்பமுள்ளவர்கள் neet.nta.nic.in என்ற வலைதளம் வழியாக மார்ச் 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நீட் தேர்வுக்கான கட்டணம் பொதுப் பிரிவுக்கு ரூ.1,700, எஸ்சி/ எஸ்டி பிரிவுக்கு ரூ.1,000, பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.1,600 -ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனுடன், ஜிஎஸ்டி மற்றும் சேவைக் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும்.

ஒரு மாணவர் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நீட் தேர்வு 3 மணி நேரம்20 நிமிடம் நடைபெறும். தேர்வுமுடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியிடப்படும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளிட்டதகவல்களை https://nta.ac.in/என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011- 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்புகொண்டு விளக்கம் பெறலாம் என என்டிஏ தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x