Published : 31 Jan 2024 07:02 AM
Last Updated : 31 Jan 2024 07:02 AM
சென்னை: சென்னை ஐஐடியில் `வாத்வானி தரவு அறிவியல்' மற்றும் `செயற்கைநுண்ணறிவு' (ஏஐ) மையத்தை தொடங்குவதற்கான அறிமுக நிகழ்ச்சி கிண்டியில் உள்ள நிறுவனவளாகத்தில் நேற்று நடைபெற்றது.
சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, முதல்வர் மகேஷ் பஞ்சக்னுலா, ஐஐடி முன்னாள் மாணவரும், ஐகேட், மாஸ்டெக் டிஜிட்டல்நிறுவனத்தின் இணை நிறுவனருமான சுனில் வாத்வானி, தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைத் தலைவர் பி.ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் இயக்குநர் வி.காமகோடி பேசியதாவது: கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னை ஐஐடியில்தரவு அறிவியல் மற்றும் செயற்கைநுண்ணறிவு துறை அறிமுகப்படுத்தப் பட்டது. இந்த துறையின் அடுத்தகட்டவளர்ச்சிக்காக தற்போது ஐஐடி முன்னாள் மாணவரும், ஐகேட், மாஸ்டெக்டிஜிட்டல்நிறுவனத்தின் இணை நிறுவனருமான சுனில் வாத்வானி, ரூ.110 கோடி நிதி அளித்திருக்கிறார்.
அடுத்து வரும் 4 முதல் 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவிலே இந்த துறை முதலிடத்திலும், உலக அளவில் முதல் 5 இடங்களுக்குள் இருக்க வேண்டும் என்பது எங்களுடைய இலக்கு.
இதையொட்டி தரவு அறிவியல்,செயற்கை நுண்ணறிவுத் துறையில்மருத்துவம், வேளாண்மை, உற்பத்திஉள்ளிட்டவைகளில் தனி கவனம்செலுத்தி, பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இருக்கிறோம்.
சென்னை ஐஐடியில் ஏற்கெனவே பி.எஸ். தரவு அறிவியல் ஆன்லைன் படிப்பில் 25 ஆயிரம் மாணவர்கள் படித்து வரும் நிலையில், உலக அளவில் முதல்முறையாக இளநிலை படிப்புகளில் பி.டெக். செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பகுப்பாய்வுஎன்ற படிப்பையும் ஜூலை மாதம்தொடங்க உள்ளோம். இந்த படிப்பானது போதிய அளவு வேலை வாய்ப்பை வழங்கக் கூடியதாக இருக்கும்.
இந்தப் படிப்புக்கான மாணவர்சேர்க்கை ஜேஇஇ நுழைவுத்தேர்வுவழியாகவே நடத்தப்படும். முதல்கட்டமாக 30 இடங்களுடன் இந்த படிப்புஆரம்பிக்கப்படுகிறது. தொடர்ந்து, முதுநிலை எம்.டெக். தரவு அறிவியல் - செயற்கை நுண்ணறிவு படிப்பும் தொடங்கப்படும். இதற்கான மாணவர்சேர்க்கை கேட் தேர்வு மூலம் நடத்தப் படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT