Published : 02 Jan 2024 06:20 AM
Last Updated : 02 Jan 2024 06:20 AM
சென்னை: நாடு முழுவதும் 18 நிப்ட் எனும் தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனங்கள் (NIFT-National Institute of Fashion Technology) மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இந்த நிறுவன படிப்புகளில் சேர தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
அதன்படி நடப்பாண்டுக்கான நிப்ட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி 5-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பர் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் (ஜனவரி 3) நிறைவு பெறுகிறது.
எனவே, விருப்பமுள்ளவர்கள் nift.ac.in எனும் வலைதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பை தவறவிடும் மாணவர்கள் கூடுதலாக ரூ.5,000 தாமதக் கட்டணம் செலுத்தி ஜனவரி 4 முதல் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த நிப்ட் தேர்வு நாடு முழுவதும் 60 நகரங்களில் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட் ஜனவரி 3-வது வாரத்தில் வெளியாக உள்ளது. கூடுதல் விவரங்களை /www.nta.ac.in எனும் இணையத்தில் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT