Published : 25 Dec 2023 09:59 AM
Last Updated : 25 Dec 2023 09:59 AM
சென்னை: பி.ஆர்க். நுழைவுத் தேர்வுக்கு பிப்ரவரி 1 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மத்திய ஆர்க்கிடெக்சர் கவுன்சில் அறிவித்துள்ளது.
பி.ஆர்க். எனப்படும் இளநிலை கட்டிடக்கலை படிப்பு, ஐந்தாண்டு படிப்பாகும். இதில் சேர விரும்புவோர் 'நாட்டா' நுழைவுத் தேர்வு எனப்படும் தேசிய கட்டிடக்கலை திறனறி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வை மத்திய ஆர்க்கிடெக்சர் கவுன்சில் நடத்துகிறது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு (2024-25) பிஆர்க் நுழை வுத் தேர்வுக்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.
இதுதொடர்பாக மத்திய ஆர்க்கிடெக்சர் கவுன்சில் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘2024-25 கல்வி ஆண்டுக்கான 'நாட்டா' நுழைவுத் தேர்வு, அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரை அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 1-ம் தேதி தொடங்குகிறது. நுழைவுத் தேர்வுக்கான கல்வித்தகுதி, பாடத்திட்டம், ஆன்லைன் விண்ணப்ப பதிவு முறை உள்ளிட்ட விவரங்களை www.nata.in மற்றும் www.coa.gov.in என்றஇணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்’ என கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT