Published : 23 Dec 2023 06:30 AM
Last Updated : 23 Dec 2023 06:30 AM

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வு: தனித்தேர்வர் விண்ணப்பிக்கலாம்

சென்னை: அரசு தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராம வர்மா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும்தகுதியான தனித்தேர்வர்களிட மிருந்து ஆன்லைனில் விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏற்கெனவே, நேரடி தனித்தேர்வாக பிளஸ் 1 பொதுத்தேர் வெழுதி தேர்ச்சி பெற்ற, தேர்ச்சிபெறாத, தேர்வில் பங்கேற்காத தேர்வர்கள் அனைவரும் தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதற்கும், பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.

தேர்வர்கள் டிசம்பர் 27 முதல்ஜனவரி 10 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் இயக்கக சேவை மையத்துக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவுசெய்ய வேண்டும். மேற்குறிப்பிட்ட காலக்கெடு வுக்குள் விண்ணப்பிக்க தவறியவர்கள் சிறப்பு அனுமதி (தத்கல்) திட்டத்தின்கீழ் ஜனவரி 11 மற்றும் 12-ம் தேதி தேர்வு கட்டணத்துடன் கூடுதல் கட்டணம் (எஸ்எஸ்எல்சி -ரூ.500, பிளஸ் 1, பிளஸ் 2 - ரூ.1000) செலுத்தி விண்ணப்பிக்க வேண் டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x