Published : 18 Dec 2023 06:04 AM
Last Updated : 18 Dec 2023 06:04 AM
சென்னை: சென்னையில் வரும் 21-ம் தேதி நடைபெறும் அங்கக வேளாண்மையில் காய்கறி உற்பத்தி செய்வதற்கான பயிற்சி வகுப்பில் விருப்பமுள்ளவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சிமைய தலைவர் ஏ.டி.அசோக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில், வரும் 21-ம் தேதி, அங்கக வேளாண்மையில் காய்கறி உற்பத்தி செய்வதற்கான பயிற்சி, செயல்முறை விளக்கத்துடன் அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சி வகுப்பில் இயற்கை வேளாண்மையின் கொள்கைகள், மண் வள வேளாண்மை, இயற்கை முறையில் ஊட்டச்சத்து தயாரித்தல், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, அங்கக தரச் சான்றிதழ் பெறுவது ஆகியவை தொடர்பாக சிறப்பு தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துரையாடுகின்றனர். இதை விவசாயிகள், மகளிர், இளைஞர்கள், தொழில்முனைவோர், சுயஉதவிக் குழுக்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ளலாம். பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் 044-29530048 என்ற தொலைபேசி எண்ணில்தொடர்புகொண்டு, முன் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT