Published : 27 Nov 2023 05:20 PM
Last Updated : 27 Nov 2023 05:20 PM

மாணவியின் அந்த அழுகை... - போதைப் பொருட்களுக்கு எதிராக ஈர்த்த பழங்குடி மாணவர்களின் நாடகம்!

நடிக்கும்போது உண்மையிலேயே அழுதுவிட்ட பழங்குடியின பள்ளி மாணவி நாடகம் தொடங்கிய முதல் முடியும் வரை அனைவரையும் கவனத்தை ஈர்த்த நாடகம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைகிராமத்தில் பரண் அமைப்பு சார்பில் அரசியல் சாசன நிர்ணய தினம் மற்றும் பழங்குடியின குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி சத்தியமங்கலம், தாளவாடி, கடம்பூர், கேர்மாளத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக ஓவியம், கட்டுரை,பேச்சு, நாடகம், நடனம் மற்றும் பாட்டுப்போட்டிகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் பின்னாளில் போதை பழக்கத்து அடிமையாகி வாழ்வாதாரத்தை இழக்கும் நாடகம் நடைபெற்றது. இந்த நாடகத்தில் நடித்த பழங்குடியின குழந்தைகளின் நடிப்பு தத்ரூபமாக இருந்தது. மது போதையில் சாலை விபத்தில் உயிரிழந்த மகனை பார்த்து கதறி அழும் காட்சியில் தாயாக நடித்த மாணவி வின்சி கரோலின் உண்மையிலேயே அழுதுவிட்டார். இதைப் பார்த்த அங்கி்ருந்த பள்ளி மாணவிகளும் அழுதது மனதை நெகிழ வைத்தது.

அதே பள்ளி மாணவர் மாணவர் நிஷார்ந்த் மகன் உடலை பார்த்து பள்ளிக்கு செல்வதை தடுத்ததால் போதை பழக்கம் ஏற்பட்டதாக கூறி அழும் காட்சியும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததது. பழங்குடியின மாணவ,மாணவியரின் அசார்த்தியமான நடிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. சிறப்பாக நடித்த மாணவர் நிஷார்ந்த், மாணவி வின்சி கரோலினுக்கு பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x