Published : 20 Nov 2023 05:19 AM
Last Updated : 20 Nov 2023 05:19 AM

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.7 முதல் அரையாண்டு தேர்வு

சென்னை: தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிச.7-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோன்று, 6 முதல் 10-ம் வகுப்புகளுக்கு அரையாண்டு மற்றும் 2-ம் பருவத் தேர்வுகள் டிசம்பர் 11 முதல் 21-ம் தேதி வரை நடக்கிறது.

இந்த கல்வி ஆண்டு முதல் தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு மாநில அளவில் ஒரே வினாத்தாள் அடிப்படையில் நடத்தப்படுகிறது. அதன்படி, அரையாண்டு தேர்வுக் கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி, 11, 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வுகள் டிச.7 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளன. 11-ம் வகுப்புக்கு காலை 9.30 முதல் மதியம் 12.45 மணி வரையும், 12-ம் வகுப்புக்கு மதியம் 1.15 முதல் மாலை 4.30 மணி வரையிலும் தேர்வுகள் நடைபெறும்.

6 - 10 வகுப்புகளுக்கு: 6 முதல் 10-ம் வகுப்புகளுக்கு அரையாண்டு மற்றும் 2-ம் பருவத் தேர்வுகள் டிசம்பர் 11 முதல் 21-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளன.

இதில் டிசம்பர் 11-ல் தமிழ், 12-ல் விருப்ப மொழி, 13-ல் ஆங்கிலம், 15-ல் அறிவியல், 18-ல் கணிதம், 20-ல் சமூக அறிவியல் மற்றும் 21-ம் தேதி உடற்கல்வி தேர்வுகள் நடைபெற உள்ளன.

6, 7, 8-ம் வகுப்புகளுக்கு காலை 10 முதல் மதியம் 12.30 மணி வரையும், 9, 10-ம் வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் மாலை 4.30 மணி வரையிலும் தேர்வு நடைபெறும்.

தேர்வுக்கு முந்தைய நாளில் அதற்கான வினாத்தாள்களை தலைமை ஆசிரியர்கள் எமிஸ்தளம் வழியாக பதிவிறக்கம் செய்து அச்சிட்டு கொள்ள வேண்டும்.

பதிவிறக்கம் செய்வதில் பிரச்சினை இருந்தால், 14417 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அதை பதிவு செய்யவேண்டும்.

அரையாண்டு விடுமுறை: மேலும், கல்வித்துறை அதிகாரிகள் வட்டாரங்கள் கூறும்போது, அரையாண்டு தேர்வுகள் முடிந்த பிறகு, டிச.23 முதல் ஜன.1-ம் தேதி வரை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. 11, 12-ம் வகுப்புகளுக்கான பாடங்கள் முழுவதையும் டிசம்பர் முதல் வாரத்துக்குள் நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x