Published : 17 Nov 2023 06:23 AM
Last Updated : 17 Nov 2023 06:23 AM

எம்.டி, பிஎச்.டி இரட்டை பட்டப்படிப்பு பாடத்திட்டம்: சென்னை ஐஐடி - ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: சென்னை ஐஐடி மற்றும் ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, எம்.டி, பிஎச்.டி ஆகியஇரட்டை பட்டப்படிப்பு பாடத்திட்டத்தை வழங்க புரிந்துணர்வுஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. சென்னை ஐஐடி மற்றும் ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து எம்.டி, பிஎச்.டி ஆகியஇரட்டை பட்டப்படிப்பு பாடத்திட்டத்தை அடுத்த ஆண்டு கொண்டுவர உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி சென்னை ஐஐடியில் நேற்று நடைபெற்றது.

இதில், ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனதுணை வேந்தர் உமாசேகர், சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி ஆகியோர் பங்கேற்று, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அப்போது சென்னை ஐஐடியின் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை தலைவர் போபி ஜார்ஜ், ஐஐடி சென்னை ஐஐடி கல்வி நிறுவனப் பேராசிரியர் ஆர்.கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இத்திட்டத்தின் மூலம், ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் முதுகலை மருத்துவப் பட்டமும், சென்னை ஐஐடி சார்பில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் பிஎச்.டி பட்டமும் வழங்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி பேசியதாவது:

கண்டுபிடிப்புக்கு வழிவகுக்கும்: இந்த உலகுக்கு மருத்துவத் தொழில்நுட்பம் அவசியம். தொழில்நுட்ப உலகை ஆராய கணினித் துறையில் திறமைமிகுந்த மருத்துவர்கள் அதற்குத் தேவைப்படுகின்றனர். இத்தேவையை செயல்படுத்துவதன் தொடக்கமாக இந்த இரட்டை பட்டப்படிப்பு பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பாடத்திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக இங்குதான் தொடங்கப்படுகிறது. இந்த முயற்சி, பல முக்கியமான கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என நம்புகிறேன். 'மருத்துவர்-விஞ்ஞானிகள்' என்று அழைக்கப்படும் எம்.டி - பிஎச்.டி பட்டதாரிகள் குறைவாகவே உள்ளனர்.

உடலியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்களில் 37 சதவீதம் பேர் இத்தகைய படிப்பை முடித்தவர்கள்தான். புகைபிடித்தலுக்கும் புற்றுநோய்க்கும், சர்க்கரைக்கும் நீரிழிவு நோய்க்கும் உள்ள தொடர்புகளை, அவற்றுக்கான காரணங்கள் மற்றும்விளைவுகளோடு இவர்கள் நிரூபித்துள்னர். இந்தியாவில் அதிகமான அளவில் இத்தகைய விஞ்ஞானிகள் தேவைப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x