Published : 29 Oct 2023 06:59 AM
Last Updated : 29 Oct 2023 06:59 AM

சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.யில் நவீன வசதியுடன் மாணவர் தங்கும் விடுதி கட்ட பூமிபூஜை

திருச்சி சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.யில் நவீன வசதிகளு டன் கூடிய மாணவர் விடுதிகள் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில், பல்கலை. வேந்தர் அ.சீனிவாசன், இணைவேந்தர் அனந்தலட்சுமி கதிரவன், குழுமச் செயலாளர் நீலராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சென்னை: திருச்சி சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய மாணவர் தங்கும் விடுதிகள் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

பல்கலைக்கழக வேந்தர் அ.சீனிவாசன், திருச்சி சமயபுரம்,பெரம்பலூர் மற்றும் சிறுவாச்சூர் வளாகங்களில் கட்டப்பட உள்ள மாணவர் விடுதிகளுக்கு அடிக்கல் நாட்டிவைத்தார். இந்த இடங்களில் 20 லட்சம் சதுர அடி பரப்பில், 7 மாணவர் விடுதிகள் கட்டப்பட உள்ளன.

இந்த விடுதிகள், நவீன சமையலறை, குளிரூட்டப்பட்ட அறைகள்,உடற்பயிற்சிக் கூடம், ஏடிஎம் மையம், உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகள், 24 மணி நேர மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்டதாகவும், சுமார் 10,000 மாணவர்கள் தங்கும் வகையிலும் கட்டப்பட உள்ளன

இந்த நிகழ்வில், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக இணைவேந்தர் அனந்தலட்சுமி கதிரவன், தனலட்சுமி சீனிவாசன்குழுமச் செயலாளர் நீலராஜ், சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் நீவாணி கதிரவன், பல்கலைக்கழக எப்.சி. நிர்மல் கதிரவன், அறக்கட்டளை உறுப்பினர் ராஜபூபதி, பல்கலைக்கழக துணைவேந்தர் சி.கே.ரஞ்சன் மற்றும் பதிவாளர், பல்கலைக்கழக புல முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x