Published : 14 Oct 2023 06:15 AM
Last Updated : 14 Oct 2023 06:15 AM

சின்மயா அகாடமி தி இந்து எஜுகேஷன் பிளஸ் சார்பில் அக். 15ல் ‘யுபிஎஸ்சி/டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்’ கருத்தரங்கம்

சென்னை: நமது தேசத்தின் எதிர்கால நிர்வாகிகளை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் சின்மயா அகாடமி ஃபார் சிவில் சர்வீசஸ் (Chinmaya Academy for Civil Services) உடன் ‘தி இந்து எஜுகேஷன் பிளஸ்’ இணைந்து ‘யுபிஎஸ்சி/டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்: குறிப்புகள், நுட்பங்கள் மற்றும் பயிற்சி முறைகள்’ எனும் இணையவழி கருத்தரங்கை அக்டோபர் 15-ம்தேதி காலை 11 மணிக்கு நடத்துகின்றன.

சிவில் சர்வீஸ் ஆர்வலர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காகத் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனம் சின்மயா அகாடமி. இது 6 மாதங்கள் முதல்3 ஆண்டுகள் வரையிலான பயிற்சிகளை நேரடியாகவும் இணைய வழியிலும் அளித்து வருகிறது. தகுதியான ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகையும் (scholarship) வழங்குகிறது சின்மயா அகாடமி.

இத்துறையில் ஆழ்ந்த அனுபவம் கொண்ட முன்னாள் அரசு உயரதிகாரிகள் கல்வியாளர்கள் ஆகியோர் சின்மயா அகாடமியின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ளார்கள். இதுவரை 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சின்மயா அகாடமியால் பயிற்சியளிக்கப்பட்டு அதில் 28 பேர் இந்தியா முழுவதும் பல்வேறு குடிமைப் பணிகளில் வெற்றிகரமாக பணியமர்த்தப்பட்டுள்ளார்கள்.

யுபிஎஸ்சி / டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த இந்த கருத்தரங்கில் முன்னாள் காவல் துறை தலைமை இயக்குநரும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவருமான ஆர்.நட்ராஜ்,முன்னாள் காவல் துறை தலைமைஇயக்குநர் எம்.ரவி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் குடியிருப்பு நிர்வாகஇயக்குநர் கே.எஸ்.கந்தசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர். ‘தி இந்து’ சிறப்பு நிருபரான அலோசியஸ் சேவியர் லோபஸ் இந்த கருத்தரங்கை ஒருங்கிணைக்கிறார்.

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற விரும்பும் அனைவருக்கும் இக்கருத்தரங்கு சிறந்த வழிகாட்டுதலை வழங்கும். இதில் பங்கேற்க கட்டணம் ஏதுமில்லை. இதில் பங்கேற்க உடனே பதிவு செய்யுங்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x