Published : 13 Sep 2023 04:08 AM
Last Updated : 13 Sep 2023 04:08 AM

“எங்களுக்கு உப்புமாவே வேண்டாம்” - விடுதி மாணவியர் கோரிக்கையால் அமைச்சர் கயல்விழி அதிர்ச்சி

காஞ்சிரங்காலில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவிகள் விடுதியில் ( எண் 1 ) பழுதடைந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

சிவகங்கை: ‘‘எங்களுக்கு உப்புமாவே வேண் டாம்’’ என விடுதி மாணவிகள் கோரிக்கை விடுத்ததால் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி அதிர்ச்சி அடைந்தார்.

சிவகங்கை காஞ்சிரங்காலில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவிகள் விடுதியில் அமைச்சர் கயல்விழி, மாவட்ட ஆட்சியர் ஆஷா ஆஜித் ஆகி யோர் ஆய்வு செய்தனர். அப் போது விடுதியில் ஜன்னல்கள் அடைக்கப்பட்டிருந்தன. ஏன் அவற்றை திறக்கவில்லை என கேட்டார். கொசுத் தொல்லையால் ஜன்னல்களை திறப்பதில்லை என மாணவிகள் தெரிவித்தனர்.

அரசு கொடுக்கும் கொசு வலை என்ன ஆனது என்று கேட்டார். அவை முற்றிலும் சேதமடைந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக சரி செய்து கொடுக்குமாறு அதிகாரிகளை அமைச்சர் கண்டித்தார். பின்னர் உணவு தரமாக வழங்கப் படுகிறதா? உப்புமாவுடன் காய்கறிகள் சேர்த்து வழங்க சொல்லவா? என்று கேட்டார்.

ஆனால் தங்களுக்கு உப்புமாவே வேண்டாம் என மாணவிகள் அனைவரும் தெரிவித்ததால் அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் கடந்த 6 மாதங்களாக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் இயங் காததால், தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறோம் என மாணவிகள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பழுதடைந்த இயந்திரத்தை செய்தியாளர்கள் புகைப்படம் எடுத்த போது, இளநிலை பொறியாளர் வேல் முருகன் அங்கிருந்த செய்தியாளர்களை அவதூறாக பேசினார்.

மேலும் அமைச்சர் ஆதி திராவிடர் நல விடுதியில் ஆய்வு செய்வதை படம் எடுக்க விடாமல் தடுத்தார். அமைச்சரும் மாணவிகள் கூறிய குறைகளை முறையாக விசாரிக்காமல் நழுவியதால் செய்தியாளர்கள், மாணவிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x