Published : 12 Sep 2023 07:17 AM
Last Updated : 12 Sep 2023 07:17 AM

அரசு கல்லூரிகளில் காலி இடங்களுக்கு செப்.14 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு செப்.14 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை செயலர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள 164 அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கையில், காலியாக இருந்த சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணவர் சேர்க்கைசம்பந்தப்பட்ட கல்லூரிகளில் ஆக.21-ம் தேதி முதல் நடத்தப்பட்டது.

3 நாட்கள் நீட்டிப்பு: இருப்பினும், சில அரசு கல்லூரிகளில், சில பாடப்பிரிவுகளில் இடங்கள் காலியாக உள்ளன. எனவே, இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதளங்கள் வாயிலாக முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் செப்.14-ம் தேதி வரை 3 நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரிவாரியான பாடப் பிரிவுகளின் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் “TNGASA2023-UG VACANCY”- என்ற தொகுப்பில் காணலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x