Published : 17 Aug 2023 04:57 AM
Last Updated : 17 Aug 2023 04:57 AM
சென்னை: தமிழக தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பில், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை (ஆக.18) காலை 10 மணி முதல் வழங்கப்பட உள்ளது.
எனவே, பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் வாயிலாகவும் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
அதேபோல, பத்தாம் வகுப்புதுணைத் தேர்வு எழுதியவர்களில் மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றமுள்ள மாணவர்களின் பதிவெண் பட்டியல் நாளை(ஆக.18) மதியம் வெளியிடப்படுகிறது. அதன் விவரங்களை மாணவர்கள் தேர்வுத் துறையின் www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT