Published : 25 Jul 2023 04:37 AM
Last Updated : 25 Jul 2023 04:37 AM

மருத்துவ கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடக்கம்

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடங்குகிறது. தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்த மாணவர் ஜெ.பிரபஞ்சன், டெல்லி எய்ம்ஸ் அல்லது புதுச்சேரி ஜிப்மரில் சேர முடிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2023-24கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு, சுகாதாரத் துறையின் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் இன்று தொடங்குகிறது.

மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு, விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 27-ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேரடியாக நடைபெற உள்ளது.

நீட் தேர்வில் 720-க்கு 720 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்தியஅளவில் முதல் இடம் பிடித்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஜெ.பிரபஞ்சன், தமிழக அரசின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்தார். அகில இந்திய கலந்தாய்வில் பங்கேற்றுள்ள அவர் டெல்லி எய்ம்ஸ் அல்லது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர முடிவு செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x