Last Updated : 23 Jul, 2023 01:10 PM

 

Published : 23 Jul 2023 01:10 PM
Last Updated : 23 Jul 2023 01:10 PM

வருவாய் குறைவால் வழியில்லாத துயரம்: ஓசூர் தூய்மைத் தொழிலாளர்களின் சிறார்கள் கல்வியறிவுக்காக குப்பை வாகனத்தில் பயணம்

ஓசூர்: ஓசூர் ஆனந்த் நகர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் பயிலும் தூய்மைப் பணியாளர்களின் சிறார்கள் தினசரி பள்ளிக்கு குப்பை வாகனத்தில் பயணம் செய்யும் அவலம் நடந்து வருகிறது.

ஓசூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி பகுதியில் குப்பைகளைச் சேகரிக்க தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 200 குடும்பத்தினர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சின்ன எலசகிரியில் உள்ள ஆனந்த் நகர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இவர்களின் இருப்பிடத்திலிருந்து சுமார் 1 கிமீ தொலைவில் பள்ளி உள்ளது. பள்ளிக்கு வரும் சாலைகளில் அதிக போக்குவரத்து இருப்பதுடன், குழந்தைகளுக்குத் தெலுங்கு மொழி மட்டுமே தெரியும் என்பதால், வாகனங்களில் மட்டுமே பள்ளிக்கு வந்து செல்ல வேண்டிய நிலையுள்ளது.

ஆனால், போதிய வருவாய் இல்லாததால் வாகனங்கள் மூலம் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியாத தூய்மைத் தொழிலாளர்கள் பணியின் போது, குப்பைகள் சேகரிக்கப்படும் வாகனத்தில் குழந்தைகளை அழைத்துச் செல்லும் துயரம் நடந்து வருகிறது.

இது தொடர்பாக தூய்மைப் பணியாளர் சஞ்சீவன் கூறியதாவது: ஆந்திர மாநிலத்திலிருந்து குடும்பத்துடன் வந்து தங்கி ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியில் ஈடுபடுகிறோம். ஒரு நாளைக்கு ரூ.333 சம்பளம் கிடைக்கிறது.

இந்த வருவாயில் குடும்பத்தை நடத்துவது சிரமமாக உள்ளது. எங்கள் குழந்தைகளின் படிப்பு வீணாகக் கூடாது என்பதற்காக மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ஆங்கில வழி கல்வியில் சேர்த்துள்ளோம். அனைவரும் சிறுவர்கள் என்பதால் பள்ளிக்கு நடந்து செல்ல அச்சப்பட்டு, நாங்கள் பணி செய்யும் குப்பை வாகனத்தில் காலை, மாலையில் அழைத்துச் செல்கிறோம்.

கடந்த முறை இருந்த ஒப்பந்ததாரர் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போக்குவரத்துச் செலவை அவர் ஏற்றுக்கொண்டார். புதிய ஒப்பந்ததாரர் சம்பளம் மட்டும் கொடுப்பதால் வேறு வழியில்லாமல் குப்பைகளோடு, குழந்தைகளையும் அழைத்து செல்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். கல்வி அறிவுக்காகக் குப்பை வாகனத்தில் செல்லும் மாணவர்களின் நிலையைப் பார்க்கும் பொதுமக்கள் வேதனை அடைவதோடு, சிறுவர்களுக்கு மாற்று நடவடிக்கைக்கு வழி கிடைக்குமா என்ற

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x