Published : 11 Jul 2023 05:16 AM
Last Updated : 11 Jul 2023 05:16 AM
சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ஏபிஜே அகாடமி உடன் இணைந்து நடத்தும் ‘வேதிக் கணிதம்’ ஆன்லைன் நிகழ்ச்சி வரும் ஜூலை 17-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த ஆன்லைன் பயிற்சியில் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள், டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி தேர்வு எழுதுபவர்கள் மற்றும் கணிதப் பாடத்தை எளிதாக கற்றுக்கொள்ள விரும்பும் 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் பங்கேற்று பயன்பெறலாம். தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சியில் பெரிய மற்றும் சிக்கலான கணக்குகளைக்கூட எளிதாகவும் விரைந்தும் தீர்ப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இதில் பங்கேற்க விரும்புபவர்கள் https://www.htamil.org/vedicmaths என்ற லிங்க், அல்லது இத்துடன் உள்ள கியூஆர் கோடு மூலமாக, ரூ.599 (ஜிஎஸ்டி தனி) பதிவுக் கட்டணம் செலுத்தி, பதிவு செய்து கொண்டு பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 8248751369 செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT