Published : 06 Jul 2023 06:57 AM
Last Updated : 06 Jul 2023 06:57 AM
சென்னை: பிரபல எழுத்தாளர் அமரர் கல்கியின் பெயரில் இயங்கிவரும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை, ஒவ்வொரு வருடமும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
2023-24-ம் கல்வியாண்டில் ரூ.15 லட்சம் பெறுமானமுள்ள உதவித்தொகை, அவரவர் தகுதிக்கு ஏற்பவழங்கப்பட உள்ளது. இந்த உதவித்தொகையை பெற, அரசு அங்கீகாரம் பெற்றுள்ள கல்வி நிலையத்தில் படிக்க வேண்டும். பிளஸ் 1,பிளஸ் 2, பாலிடெக்னிக், பட்ட மேற்படிப்பு ஆகிய வகுப்புகளில் ஏதேனும் ஒன்றில் பயில்பவராக இருக்கவேண்டும். கடைசியாக எழுதிய தேர்வில் குறைந்தபட்சம் 80 சதவீதம்(சராசரி) மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பப் படிவத்தை www.kalkionline.com என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இம்மாதம் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT