Published : 22 Jun 2023 04:10 AM
Last Updated : 22 Jun 2023 04:10 AM

ஜூன் 30-ல் மாணவர் சேர்க்கை நிறைவு | அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஜூலை 3-ல் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 30-ம் தேதி மாணவர் சேர்க்கை நிறைவடைந்து, ஜூலை 3-ம் தேதி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 1.07 லட்சம் பட்டப் படிப்பு இடங்கள் உள்ளன.

2023–24-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை மே 8-ம் தேதி தொடங்கி, 22-ம் தேதி வரை நடைபெற்றது. ஏறத்தாழ 2.46 லட்சம்மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு, மாணவர் சேர்க்கை மே 29-ம்தேதி தொடங்கியது.

முதலில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்தது. தொடர்ந்து, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 1 முதல் ஜூன் 20-ம் தேதி வரை நடந்தது. இரண்டு கட்ட கலந்தாய்வு முடிவில், 75 ஆயிரத்து 811 இடங்கள் நிரம்பி உள்ளன. மீதமுள்ள 31 ஆயிரத்து 488 இடங்களுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தொடர்ந்து, ஜூலை 3-ம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும்என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

ஏற்கெனவே, இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்த உடன், ஜூன் 22-ம் தேதி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அறிவித்திருந்த நிலையில், கல்லுாரி திறப்பு மேலும் சில நாட்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x