Last Updated : 15 Jun, 2024 03:30 PM

 

Published : 15 Jun 2024 03:30 PM
Last Updated : 15 Jun 2024 03:30 PM

கோவை திமுக முப்பெரும் விழா: வாகன வழித்தட விவரங்கள் அறிவிப்பு 

கோவை: திமுக முப்பெரும் விழா கோவை கொடிசியா மைதானத்தில் இன்று (ஜூன் 15) மாலை நடக்கிறது. இதையொட்டி உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வருபவர்கள் வந்து செல்ல வேண்டிய வழித் தடங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக திமுக மாவட்டச் செயலாளர்கள் நா.கார்த்திக், தொ.அ.ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம் பகுதிகளிலிருந்து வருபவர்கள் அவிநாசி சாலை, ஜென்னி கிளப் வழியாக கொடிசியாவுக்கு வரவும். மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் கிழக்கு பகுதிகள், அன்னூர் பகுதிகளிலிருந்து வருபவர்கள் சேரன்மாநகர், தண்ணீர் பந்தல் வழியாக வரவும். சூலூரிலிருந்து விழாவுக்கு வருபவர்கள் அவிநாசி சாலை, ஜென்னி கிளப் வழியாக வரவும்.

வால்பாறை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளிலிருந்து வருபவர்கள் பொள்ளாச்சி சாலை எல் அன்ட் டி பைபாஸ், வெள்ளலூர் பிரிவு, வெள்ளலூர், சிங்காநல்லூர், காமராஜர் சாலை வழியாக வரவும். சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் பகுதிகளிலிருந்து வருபவர்கள் அவிநாசி சாலை நீலாம்பூர், சின்னியம்பாளையம், தொட்டிபாளையம் பிரிவு, சித்ரா சந்திப்பை கடந்து வரவும்.

திருச்சி, கரூர், தாராபுரம், பல்லடம் மற்றும் தென் மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் திருச்சி சாலையிலிருந்து சூலூர் சந்திப்பிலிருந்து வலது பறம் திரும்பி சூலூர் குளம், முத்துக்கவுண்டன்புதூர் ரயில்வே பாலம் வழியாக வரவும். பழனி, உடுமலை, வால்பாறை, ஆனைமலை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளிலிருந்து விழாவுக்கு வருபவர்கள் பொள்ளாச்சி சாலை எல் அன்ட் டி பைபாஸ், வெள்ளலூர் பிரிவு, வெள்ளலூர், சிங்காநல்லூர், காமராஜர் சாலை, அவிநாசி சாலையை அடைந்து, டைடல் பார்க், தண்ணீர் பந்தல் ஜங்ஷன் வழியாக வரவும்.

வாளையார், க.க.சாவடி, நவக்கரை, எட்டிமடை பகுதிகளிலிருந்து வருபவர்கள் பாலக்காடு சாலையிலிருந்து குனியமுத்தூர், ஆத்துப்பாலம், உக்கடம் சுங்கம் பைபாஸ் சுங்கம், ராமநாதபுரம் சிக்னல், புலியகுளம் வழியாக அவினாசி சாலையை அடைந்து வரவும். நீலகிரி, காரமடை, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளிலிருந்து வருபவர்கள் அன்னூர், குரும்பபாளையம், காளப்பட்டி நால்ரோடு வழியாக வரவும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x