Published : 16 Jun 2024 09:41 AM
Last Updated : 16 Jun 2024 09:41 AM
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில், 5-வது வழித்தடத்தில் ஆதம்பாக்கத்தில் மெட்ரோரயில் உயர்மட்ட பாதை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்,ரூ.63,246 கோடி மதிப்பில் 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ.தொலைவுக்கு செயல்படுத்தப் படுகிறது. இவற்றில் மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடம் (44.6 கி.மீ.) ஆகும். மாதவரத்தில் இருந்து ரெட்டேரி சந்திப்பு, வில்லிவாக்கம், வளசரவாக்கம், போரூர், ஆலந்தூர், ஆதம்பாக்கம், வானுவம்பேட்டை, மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, மேடவாக்கம் சந்திப்பு, பெரும்பாக்கம் வழியாக சோழிங்கநல்லூர் வரை மெட்ரோ ரயில்உயர்மட்டப்பாதை அமைக் கப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் ஏற்கெனவே மேம்பால ரயில் பாதை இருப்பதால், அருகிலேயே மெட்ரோ ரயில் நிலையங்கள் அமையும் வகையில், பணிகள் நடைபெறுகின்றன. அதன்படி, ஆதம்பாக்கம் மேம்பால ரயில் பாதைக்கு மேல், மெட்ரோ ரயில் உயர்மட்டப் பாதை அமைப்பதற்காக, 20 மீட்டர் உயரமான பிரம்மாண்ட தூண்களும் அதில் பாலமும் அமைக்கும் பணிகள் நடைபெறு கின்றன.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, பயணிகள் வந்து செல்ல வசதியாக, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப் படுகிறது.
மாதவரம் - சோழிங்கநல் லூர் வரையிலான வழித்தடத்தில் பரங்கிமலை, ஆதம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமையவுள்ளன. மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் வந்துசெல்ல வசதியாக, நகரும்படிக்கட்டு, நடைமேம்பாலங் கள் அமைக்கப்படும், இத்தடத்தில் மொத்த பணிகளும் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளோம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT