Published : 24 Aug 2017 01:00 PM
Last Updated : 24 Aug 2017 01:00 PM
ஆதார் அட்டை இன்று வாழ்வின் முக்கிய அங்கமாக ஆகிப்போனது. அனைத்து விதமான அரசு மற்றும் தனியார் சேவைகளை பெற , சிம்கார்டு முதல் வங்கி சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் எளிதில் பெற ஆதார் எண் மற்றும் விரல் ரேகை அளிப்பதன் மூலம் எளிதாக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு , வாக்காளர் அடையாள அட்டை , ரேஷன் கார்டுகள் போன்றவற்றின் மூலம் மக்கள் தொகை விபரங்கள் சேகரிக்கப்பட்டாலும் அவை பொதுமக்களின் அறியாமை , அலட்சியம் , ஆர்வமின்மை , தகவல்களை மறைப்பது காரணமாக முழுமையான தகவலாக இல்லை.
உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடுதழுவிய குடிமக்கள் தகவல் தளத்தை உருவாக்குவதற்காக கொண்டுவரப்பட்டதே ஆதார் அட்டை ஆகும்.
அனைத்து இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு (Unique Identification Authority of India), என்பது இந்திய நடுவண் அரசின் ஆணையமைப்பு ஆகும். இந்த அமைப்பு இந்திய அரசின் ஆட்சிப்பகுதிக்குள் வசிப்பவர்களுக்கு ஆதார் அடையாள எண் வழங்குவதற்காக பிப்ரவரி 2009இல் அமைக்கப்பட்டது.
இவ்வமைப்பின் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் தகவல்கள் , கை ரேகை ,கண் கருவிழி , புகைப்படம் மற்ற சுய விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாள எண் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் விபரங்களை தெரிவிக்க ஆதார் எண் மற்றும் விரல் ரேகையை அளித்தால் மட்டும் போதும் என்ற நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் தங்களது சுய விபரங்களை , தனி நபர் ரகசியத்தை தனியார் ஏஜன்சிகள் மூலம் சேகரிப்பது சரியல்ல , கேஸ் மானியம் பெற, வங்கி எண்ணுடன் ஆதார் இணைக்க வேண்டும் என்று தொடங்கி ஆதாரை கட்டாயமாக்கும் பணி தற்போது, ரேஷன் மானியம் பெற ஆதார் எண் இணைப்பு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் என்று எல்லாம் ஆதார் மயமாகிவிட்டது.
அரசு அல்லது நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படும் அடையாள அட்டைகள் அவர்களை அடையாளம் காண்பதற்காக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர அதில் தனி நபரை நோட்டமிடும் விவகாரங்கள் இருக்கக் கூடாது என வழக்குத்தொடரப்பட்டு தற்போது 9 நீதிபதிகள் அமர்வு தனிநபர் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்துள்ளனர்.
* உங்கள் பார்வையில் எவையெல்லாம் தனி நபர் ரகசியம் ,
* ஆதார் அட்டைக்கு எந்த விபரங்களை அளிக்கலாம்
* அனைத்து சேவைகளுக்கும் ஆதார் எண்ணை இணைப்பது சரியான நடவடிக்கையா?
* ஆதார் எண்களை அனைத்து சேவைகளுக்கு இணைப்பது பொதுமக்களுக்கு வசதியாக உள்ளதா
* ஆதார் எண்கள் மூலம் அரசு சேவைகள் வழங்குவதால் முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளதா? போன்றவை குறித்து வாசகர்கள் கருத்து வரவேற்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT